தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா ?
X

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு , தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. நேற்று வரையில் 1321 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் , தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் , தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. மேலும் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேரும், சென்னையில் 7 பேரும், தென்காசியில் 4 பேரும், திண்டுக்கல் மற்றும் பெரம்பலூரில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் , தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 128 பேரும், திருப்பூரில் 108 பேரும், ஈரோட்டில் 70 பேரும், திண்டுக்கல்லில் 69 பேரும், நெல்லையில் 60 பேரும், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டில் தலா 50 பேரும், திருச்சியில் 46 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newstm.in

Next Story
Share it