தகாத உறவுக்கு இடையூறு... கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

தகாத உறவுக்கு இடையூறு... கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

தகாத உறவுக்கு இடையூறு... கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!
X

தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், காஞ்சனா தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி காஞ்சனாவிற்கும், குடும்ப உறவினரான சின்னமூக்கனூர் பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி குப்புசாமி என்பவருக்கும் தவறான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த கோவிந்தராஜ் மனைவி காஞ்சனாவை கண்டித்துள்ளார். இந்நிலையில் தான், கடந்த 4ஆம் தேதி மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கோவிந்தராஜ் வெள்ளநாயக்கனேரி சாலையில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் சாலையில் மயங்கி கிடந்துள்ளார். 


மருத்துவமனையில் உடலை ஸ்கேன் செய்த போது தான், இந்த சம்பவத்தின் வீரியம் தெரியவந்ததுள்ளது. கோவிந்தராஜின் முதுகு பகுதியில் நாட்டுதுப்பாக்கியின் 14 குண்டுகளும், தலையில் 4 குண்டுகளும் இருப்பதை கண்டறிந்து, மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர். மனைவி காஞ்சனாவின் செல்போன் பேச்சுகளை ஆய்வு மேற்கொண்ட போது, ஆண் நண்பர் குப்புசாமி, மற்றும் அதே பகுதியைச்சேர்ந்த வீரா என்கிற வீராசாமியுடன் இணைந்து கணவர் கோவிந்தராஜீவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து கோவிந்தராஜின் மனைவி காஞ்சனா மற்றும் அவரது ஆண் நண்பர் குப்புசாமி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it