1. Home
  2. தமிழ்நாடு

டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன்!

டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன்!


டூட் கிட் வழக்கில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டூல்கிட் தயாரித்து பலருக்கும் பகிர்ந்ததாக சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி சமீபத்தில் பெங்கரூவில் வைத்து டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டார்.

ஆறு நாட்கள் அவரை போலீஸார் விசாரித்தனர். இதனையடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அழைத்துவரப்பட்டார். அப்போது திஷா ரவி தரப்பில் வாதிட்ட அவரது வழக்கறிஞர், காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் திஷா ரவிக்கு தொடர்பில்லை என தெரிவித்தார்.

ஆனால் திஷா ரவிக்கு ஜாமீன் கொடுக்க டெல்லி காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திஷா ரவிக்கு ஜாமீன் மறுக்க எந்த காரணமும் இல்லை என கூறி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

போராட்டத்தின் போது எந்த நாள் என்ன திட்டம், எந்த வகையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், என்ன விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்… இந்த விவரங்களை ஆன்லைனில் ஒருங்கிணைப்பதே டூல் கிட்.

newstm.in

Trending News

Latest News

You May Like