"இயக்குனர்கள் இரக்கமின்றி நடந்து கொள்கிறார்கள்" : பகீர் கிளப்பும் பிரபல நடிகை!

"இயக்குனர்கள் இரக்கமின்றி நடந்து கொள்கிறார்கள்" : பகீர் கிளப்பும் பிரபல நடிகை!

இயக்குனர்கள் இரக்கமின்றி நடந்து கொள்கிறார்கள் : பகீர் கிளப்பும் பிரபல நடிகை!
X

இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நடிகை நிலா (எ) மீரா சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா இந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக ஏற்கனவே அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர் என்றும் முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை என்றும் கூறியுள்ளார்.  


தனக்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டது என்று கூறியுள்ள நிலா, சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பிறகும் எதுவும் இங்கே மாறவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். வேலையை தாண்டியும் பல விஷயங்கள் சினிமா துறையில் நடக்கின்றன என்றும், இந்த அழுத்தங்கள்தான் தவறான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது என தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it