" என் இதயத்தில் குத்திய CSK அணி " தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !!

" என் இதயத்தில் குத்திய CSK அணி " தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !!

 என் இதயத்தில் குத்திய CSK அணி  தினேஷ் கார்த்திக் ஆதங்கம் !!
X

இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் . கடந்த 2004 - ல் ஒருநாள், டெஸ்ட் அரங்கில் அறிமுகம் ஆனார். தமிழகத்தை சேர்ந்த இவர் ஐ.பி.எல். தொடரில் 6 அணிகளுக்காக களமிறங்கிய போதும், ஒருமுறை கூட சென்னை அணிக்காக விளையாடியது இல்லை. முதலில் டெல்லி, அடுத்து பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகளுக்காக விளையாடினார்.

2018 முதல் கொல்கத்தா அணி கேப்டனாக உள்ளார். சக தமிழக வீரர்கள் அஷ்வின், முரளி விஜய் சென்னை அணியில் பங்கேற்றனர். இதுகுறித்து அவர் கூறியது ; கடந்த 2008ல் முதல் ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. அப்போது நான் இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்தேன்.

தமிழகத்தின் முக்கிய வீரர், இந்திய அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பர் என்பதால் எப்படியும் சென்னை அணி என்னை வாங்கி விடும் என உறுதியாக நம்பினேன். இதனால், என்னை கேப்டனாக நியமிப்பார்களா, இல்லையா என்ற எண்ணம் தான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தோனியை முதலில் சென்னை அணி வாங்கியது.

அப்போது அவர் என் அருகே தான் அமர்ந்து ஏலத்தை பார்த்துக் கொண்டிருந்தார். நான் சென்னை அணிக்கு செல்லப் போகிறேன் என ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஒருவேளை தோனிக்கு இது தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

ஆனால் என் இதயத்தில் குத்தியது போல அமைந்தது அந்த சம்பவம். இது மிகப்பெரிய காயமாக ஆனது. இருப்பினும் பின்னர் தேர்வு செய்வர் என எதிர்பார்த்தேன். இப்போது வரை 13 ஆண்டுகள் ஆகி விட்டன. என்றாவது சென்னை அணியில் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

Newstm.in

Next Story
Share it