1. Home
  2. தமிழ்நாடு

டிக்டாக் தடை... வருவாய் இழப்பு எத்தனை கோடி தெரியுமா?

டிக்டாக் தடை... வருவாய் இழப்பு எத்தனை கோடி தெரியுமா?


டிக்டாக் சமூக ஊடகத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அதன் தாய்நிறுவனமான பைட் டான்ஸ்-க்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் சமூக ஊடகத்தை பயன்படுத்தியவர்களில் 30.3% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததுடன் இந்திய பங்குச் சந்தைகள் வாயிலாகவும் பணம் திரட்டவும் திட்டமிட்டிருந்த்து. இதற்கிடையில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி சார்பில் அந்நிறுவனம் சில நாட்களில் தனது செயல்பாடுகள் குறித்த விளக்கத்தை மத்திய அரசிடம் அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like