1. Home
  2. தமிழ்நாடு

வெளிநாடு சென்றதை மறைத்தாரா.? கொரோனாவுக்கு மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் உயிரிழப்பு..

வெளிநாடு சென்றதை மறைத்தாரா.? கொரோனாவுக்கு மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் உயிரிழப்பு..

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அவருக்கு நேற்று வெளியான மருத்துவ அறிக்கையின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

வெளிநாடு சென்றதை மறைத்தாரா.? கொரோனாவுக்கு மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் உயிரிழப்பு..

இதன் காரணமாக கொரோனா உயிரிழப்பு வழிகாட்டுதல்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றன. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காவல்துறையினர், அர்ச்சகர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்துள்ளனர்.

வெளிநாடு சென்றதை மறைத்தாரா.? கொரோனாவுக்கு மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் உயிரிழப்பு..

மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததாகவும், அதன் காரணமாக அவரது தாயாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. வெளிநாடு சென்று வந்ததும் கொரோனா பரிசோதனை அல்லது தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
 
newstm.in 

Trending News

Latest News

You May Like