1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவால் 20 பேர் பலியானதை மறைத்ததா மருத்துவமனை ? - வடசென்னையில் பரபரப்பு..

கொரோனாவால் 20 பேர் பலியானதை மறைத்ததா மருத்துவமனை ? - வடசென்னையில் பரபரப்பு..


சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கொரோனாவுக்கு 20 பேருக்கு மேல் பலியான நிலையில், அதனை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக புகார் எழுந்துள்ளது.  

தெற்கு ரயில்வே மருத்துவமனை பெரம்பூரில் இயங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அல்லது அறிகுறிகளுடன் அங்கு சென்று பலரும் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை ஒரு ஊடகம் பரிசோதித்துப் பார்த்தபோது, அதில் உள்ள தகவல்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனாவால் 20 பேர் பலியானதை மறைத்ததா மருத்துவமனை ? - வடசென்னையில் பரபரப்பு..

அதாவது சுமார் 20 பேருக்கு மேல் கொரோனா பாதிப்புகளால் பலியான போதிலும் அது பற்றிய தகவல் சுகாதாரத்துறைக்கு அப்டேட் செய்யப்படவில்லை என்று அந்த செய்தி கூறுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களில்தான் இந்த இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது. 

இந்த தகவல் பூதாகரமாக வெடிக்கவே தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ரயில்வே மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனாவால் 20 பேர் பலியானதை மறைத்ததா மருத்துவமனை ? - வடசென்னையில் பரபரப்பு..

அதேநேரத்தில் சென்னையில் இதுபோல மேலும் எத்தனை மருத்துவமனைகள் கொரோனா உயிர் பலிகளை மூடி மறைத்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.  

பெரம்பூரும் வட சென்னை பகுதியில்தான் உள்ளது. எனவே, வட சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பதிவுகளை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறைக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

newstm.in 

Trending News

Latest News

You May Like