1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தாரா? - சிக்கிய போலி மருத்துவர் !

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தாரா? - சிக்கிய போலி மருத்துவர் !


கொரோனா பீதி ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், போலி மருத்துவர்கள் ஒருபக்கம் மக்களுக்கு வைத்தியம் அளித்து அதிர்ச்சி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாகைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு டாக்டர் தொழில் செய்து வந்துள்ளார்.

இவரைப்பற்றி ஏராளமான புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்ததை தொடர்ந்து தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாவதி மற்றும் திருவேகம்பத்தூர் போலீசார் அவரது வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தாரா? - சிக்கிய போலி மருத்துவர் !

அப்போது ராமசாமி நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து ஊசி போடும்போது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அங்கு சட்டவிரோதமாக வைத்திருந்த மருத்துவ உபகரணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

newstm.in 

Trending News

Latest News

You May Like