டிக்டாக் பிரபலம் கைது! என்ன காரியம் செய்தார் தெரியுமா?
டிக்டாக் பிரபலம் கைது! என்ன காரியம் செய்தார் தெரியுமா?

கடந்த ஆண்டு ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் விவசாயச் சந்தையை ஆய்வு செய்த இவர், அவரிடம் புகார் அளித்த விவசாயிகளின் புகார் விண்ணப்பங்களுடன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்கச் சென்றார். அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவர் திடீரென அவரை தனது செருப்பால் சரமாரியாக அடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோனாலி போகட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் சுல்தான் சிங், சோனாலி போகட் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் டிக்டாக் பிரபலமான சோனாலி போகட், அரசாங்க அதிகாரியை அறைந்ததற்காக ஹிசாரில் கைது செய்யப்பட்டார். ஆனால் ஹிசாரில் உள்ள நீதிமன்றத்தில் அவர் உடனடியாக ஜாமீன் பெற்றார். சோனாலி போகட் மீது கலவரம் ஏற்படுத்துதல், சட்டவிரோத செயலில் ஈடுபடல், அரசு ஊழியரை கடமை செய்யவிடாமல் காயப்படுத்தியது, தடுத்தல், மிரட்டியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.
@police_haryana has filed an FIR against #TikTok lady #SonaliPhogat under section 147, 149, 332, 353, 186 & 506 for beating an officer on duty in Hisar, Haryana.
— Deepkamal Saharan (@DKSaharan) June 5, 2020
It should be a fair trial and no one should feel law to be in their pocket.#SonaliFogat #Haryana #HaryanaPolice pic.twitter.com/3OQH2lULYd
newstm.in