காதலனால் கர்ப்பமாகிய டிக்டாக் பிரபலம்... திருமணம் செய்யக்கோரி தர்ணா!

 | 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே டிக்டாக் காதலியை கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை கண்டுபிடிக்கக்கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாட்றம்பள்ளி அடுத்த நாயுன செரு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞர் தாசியப்பனூர் பகுதியை சேர்ந்த அகிலா என்பவருடன் டிக் டாக்கில் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இதனிடையே அகிலாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததை அடுத்து ஸ்ரீதரும், அகிலாவும் சென்னைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அகிலா 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது ஸ்ரீதர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அகிலா, ஸ்ரீதரின் குடும்பத்தினரிடம் முறையிட்டார். அவர்களும் வீட்டை விட்டு காலி செய்து தலைமறைவாகிவிட்டனர். 


இதுகுறித்து அகிலா திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர்  ஸ்ரீதர் வீட்டின் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, தப்பி ஓடிய ஸ்ரீதரை கண்டுபிடித்து தருவதாக கூறி வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP