1. Home
  2. தமிழ்நாடு

தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டிய டிக் - டாக் ரவுடி சூர்யா !!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டிய டிக் - டாக் ரவுடி சூர்யா !!


தன் நடிப்பு திறமையை காட்ட டிக்டாக்கிற்குள் நுழைந்தவர் சூர்யா என்கிற பெண்மனி. நாளடைவில் இவர் வெளியிடும் வீடியோக்கள் லைக்குகளை அள்ளியது. அரைகுறை டிரஸ்களும் அதிகமானது.

தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டிய டிக் - டாக் ரவுடி சூர்யா !!

ஆபாச பேச்சுக்களை சர்வசாதாரணமாக பேசி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். ரவுடி பேபி சூர்யா என்றால் டிக்டாக்கில் ரொம்பவும் பேமஸ். ஒரு கட்டத்தில் ஆபாச பதிவுகள், மோசமான விமர்சனங்கள் சூர்யாவை ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.

இதனால், கெட்ட கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக பேச ஆரம்பித்தார் சூர்யா.. விளைவு, டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள் என்று கண்ணீருடன் ஒரு பேட்டியும் தந்தார்.

இப்போது மீண்டும் இவரது பெயர் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது. திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்.. சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றவர், லாக்டவுனால் அங்கேயே தங்க நேர்ந்து விட்டது.

பிறகு ஸ்பெஷல் விமான சேவைகள் துவங்கியுள்ளதால், 4 நாளைக்கு முன்பு பிளைட்டில் கோவை வந்தார். அங்குள்ள ஒரு லாட்ஜிலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சூர்யா வந்து சேர்ந்தார்.

சூர்யா சிங்கப்பூரில் இருந்து வந்து விட்டதால், அக்கம் பக்கத்தினருக்கு கொரோனா பீதி வந்துவிட்டது. அதனால் வீரபாண்டி போலீசாருக்கும் சுகாதார துறையினருக்கும் தகவல் தந்தனர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகளும், சூரியாவை அரசு ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட்டுக்கு அழைத்து செல்ல வந்தனர்.

போலீசாரிடம் "இங்க பாருங்க.. நான் சிங்கப்பூரில் ஏசி ரூம்லேயே இருந்து விட்டேன்.. தமிழ்நாட்டு வெயிலில் இவங்க கிட்ட இருந்து எனக்கு கொரோனா பரவி விடுமோன்னு பயமா இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம் எனக்கு வேணும்.தனி சாப்பாடு வேண்டும்.

அங்கே நான் ப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. என்னை நிம்மதியாவும் ரசிகர்கள் இருக்க விட மாட்டாங்க.அப்படி நீங்க தனி ரூம் தரலேன்னா என்றால் பிரச்சினை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். அடம் பிடித்த ரவுடி சூர்யா இறுதியாக ஆம்புலன்சில் ஏற்றி திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த டெஸ்ட்டுக்கு சூர்யாவை அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டன. இந்த செய்திகளை திரட்டுவதற்காக ஒரு தனியார் டிவி செய்தியாளரும் ரெயில்வே ஸ்டேஷன் சென்றிருக்கிறார். அந்த டிவி செய்தியை திரித்து போட்டு விட்டதாக சூர்யா குற்றம் சாட்டியதுடன் , மிரட்டல் விடுக்கும் தொனியில் ஒரு வீடியோவும் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் சொல்லி உள்ளதாவது, "நேத்து நான் ரயில்வே ஸ்டேஷன் செக்-அப் வந்தேன்.. 2,3 டைம் என்னை வீடியோ எடுத்தே.. உன்னை யாருன்னு கேட்டேன்.. நீ சொல்லல.. ஐ.டி. எதுவும் உன்கிட்ட இல்லை.

சூர்யா ஏர்போர்டில் இருந்து பாதுகாப்பை மீறி தப்பிச்சு ஓடிவந்தார்னு ஏன் நியூஸ்போடுறே ? மோடி ஐயா போட்ட பிளைட்லயும், கோவை கலெக்டர் ஐயா போட்ட கன்ட்ரோலையும் மீறிநான் தப்பிச்சி வந்து நான் இப்படி திமிரா பேச முடியாது. உன் டிவி டிஆர்பி ஏத்தணும்னா என்னை பத்தி போடாதே.. என்னை எல்லாம் சீந்தாதே.. நாறிடுவே.. சரியா.. கொன்னுடுவேன்" என்று கூறியுள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like