தோனி எடுத்துள்ள புதிய முடிவு... குவியும் பாராட்டு!

தோனி எடுத்துள்ள புதிய முடிவு... குவியும் பாராட்டு!

தோனி எடுத்துள்ள புதிய முடிவு... குவியும் பாராட்டு!
X

கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும்வரை எந்த விளம்பரப்படம் மற்றும் நிகழ்ச்சிகளில் ஈடுபட ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என தோனி முடிவு செய்துள்ளார்.

தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டிலேயே தங்கி உள்ளார். அங்கு அவரது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் உள்ளிட்ட பணிகளில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இதனிடையே கொரோனா நெருக்கடி காலத்தில் தோனி நன்கொடையாக வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார் என செய்தி வெளியானது. அதனால் பலரும் அவரை விமர்சிக்கத்தொடங்கினர். இதற்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்தார்.


இந்நிலையில், தோனியின் மேலாளரும் குழந்தை பருவ நண்பருமான மிஹிர் திவாகர், கொரோனா தொற்றிலிருந்து வாழ்க்கை இயல்பு நிலைக்கு வரும் வரை எந்தவொரு பிராண்ட் ஒப்புதல்களையும் செய்ய வேண்டாம் என்று தோனி கூறியதாகத் தெரிவித்துள்ளார். பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்வதை தோனி நிறுத்தி விட்டார். வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர் எந்த வித வருவாய் ஈட்டும் செயல்களிலும் ஈடுபடப் போவதில்லை எனக் கூறி உள்ளார் எனத் தெரிவித்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it