சர்வதேச போட்டிகளில் விளையாட தோனிக்கு உடற்தகுதி...? ஹஸ்ஸி கருத்து!

சர்வதேச போட்டிகளில் விளையாட தோனிக்கு உடற்தகுதி...? ஹஸ்ஸி கருத்து!

சர்வதேச போட்டிகளில் விளையாட தோனிக்கு உடற்தகுதி...? ஹஸ்ஸி கருத்து!
X

தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி இன்னும் இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கெல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதை பொறுத்து அவர் சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளே நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் பலரும் தோனியில் கிரிக்கெட் எதிர்காலாம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான மைக்கெல் ஹஸ்ஸி, தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவரே கூறினால் சரியாக இருக்கும் என்று ஹஸ்ஸி கூறியிருக்கிறார்.

newstm.in

Next Story
Share it