தோனி இனி இந்தியாவுக்காக விளையாட மாட்டார் : ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!

தோனி இனி இந்தியாவுக்காக விளையாட மாட்டார் : ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!

தோனி இனி இந்தியாவுக்காக விளையாட மாட்டார் : ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!
X

தோனி இனியும் இந்தியாவுக்காக விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தடாலடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் மற்றும் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் உரையாடிக்கொண்டு இருந்த போது ரசிகர் ஒருவர் தோனி எப்போது இந்திய அணிக்குத் திரும்புவார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா இந்தக் கேள்வியை தோனியிடமே கேட்டுவிடுங்கள், அவருக்கு என்னதான் ஆச்சு என்று தெரியவில்லை எனப் பதிலளித்தார். அதற்குப் பதிலளித்த ஹர்பஜன் சிங்,  என்னைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிதான் இந்தியாவுக்காக தான் விளையாடிய கடைசிப் போட்டி என அவருக்குத் தெரியும் என ஹர்பஜன் கூறினார். இதன் மூலம் தோனி மீண்டும் களத்திற்கு வரமாட்டார் என்ற ரீதியில் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it