கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்கலாம்!கோவில் நிர்வாகம்!

கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்கலாம்!கோவில் நிர்வாகம்!

கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்கலாம்!கோவில் நிர்வாகம்!
X

தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் பொருட்டு இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் சைவ-வைணவ ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக இந்த விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.


2020ல் கொரோனாவால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, முக்கிய நிகழ்ச்சிகள் உள்திருவிழாவாக பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவிலுக்குள் நடத்தப்பட்டன.இந்த ஆண்டும் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோவிலுக்குள் நடைபெற்று வருகிறது.


கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டதால் சித்திரை திருவிழாவை ஆகமவிதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நாளை ஏப்ரல் 23ம் தேதி மாலை 6.15 மணிக்கு வெளி பிரகாரத்தில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் ஆடிவீதி வழியாக பவனி வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 24, 25-திருவிழா நிகழ்ச்சிகள்
ஏப்ரல்26-எதிர்சேவை
ஏப்ரல்27- குதிரை வாகனம். ஆடி வீதியில் வலம்
ஏப்ரல் 28-சைத்திய உபசாரம் சேவை,சேஷ வாகன புறப்பாடு
ஏப்ரல் 29-கருட சேவை, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல்
ஏப்ரல்30- புஷ்ப பல்லக்கு
மே 1-அர்த்த மண்டபத்தில் சேவை
மே 2-உற்சவ சாந்தி, திருமஞ்சனம்


விழா நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் திருவிழா நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலமும் விழாந் நடைபெறும் இடங்களில் அகண்ட திரை மூலம் பக்தர்கள் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it