1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!

திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது .
தினமும் வழங்கப்படும் இலவச டிக்கெட் 25,000 இருந்து 15,000 குறைக்கப்படுகிறது.ஏப்ரல் 14 முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில் தினமும் அதிகரித்து வரும் கொரோனாவால் இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் இனி கண்டிப்பாக முக கவசங்கள் மற்றும் கைகளை சுத்தம் செய்துக்கொள்ள கிருமி நாசினி போன்றவற்றை கொண்டு வர வேண்டும். திருமலையில் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

காய்ச்சல் மற்றும் சளி அறிகுறி உள்ள பக்தர்கள், திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தரிசனம் முடிந்த பக்தர்கள், உடனடியாக ஊர் திரும்பவும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Trending News

Latest News

You May Like