கொரோனாவால் துணை கமிஷனர் அனில் கோலி பலி !!

கொரோனாவால் துணை கமிஷனர் அனில் கோலி பலி !!

கொரோனாவால் துணை கமிஷனர் அனில் கோலி பலி !!
X

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை இந்தியாவில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் அண்மையில் லூதியானா காவல்துறை துணை ஆணையர் அனில் கோலி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து , அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு  திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் உயிரிழக்கும் முதல் காவல்துறை அதிகாரி இவர் தான் ஆவார். பொதுமக்கள் உயிருக்காக காவல்துறையினர் களத்தில் போராடி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை , மருத்துவர்களை போல இவர்களுக்கும் மருத்துவ கவச உடைகளை வழங்க வேண்டும் என காவல் துறை குடும்பத்தினரும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it