தமிழகத்தில் உயிரிழப்பு 22ஆக அதிகரிப்பு.. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழு விவரம்..!!

தமிழகத்தில் உயிரிழப்பு 22ஆக அதிகரிப்பு.. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழு விவரம்..!!

தமிழகத்தில் உயிரிழப்பு 22ஆக அதிகரிப்பு.. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழு விவரம்..!!
X

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 866 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 114 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் 25,503 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 72,403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 6,426 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

newstm.in 

Next Story
Share it