சீனாவுக்கு மரண அடி... இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்!

சீனாவுக்கு மரண அடி... இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்!

சீனாவுக்கு மரண அடி... இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்!
X

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சீனாவுக்கு மாற்று உற்பத்தி இடமாக உலக நாடுகள் இந்தியாவை கருதப்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு பிறகு ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25.17% ஆகக் குறைத்தது. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் நாடாக உள்ள நிலையில், தற்போது கொரோனா தாக்கம் மேலும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கேயே சந்தைப்படுத்த முடியும் என்ற காரணத்தினால் உலகிலுள்ள பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வர விருப்பம் தெரிவிக்கின்றன.

newstm.in

Next Story
Share it