சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம்  !! காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றம்..

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம்  !! காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றம்..

சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம்  !! காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றம்..
X

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ; கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றி விட்டு அரசு கொள்கை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு முறையிடுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,

சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டனர்.வருவாய் அதிகாரியை காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, சாத்தாகுளம் காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 புதிய காவலர்களை நியமித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் உத்தரவிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it