சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே !! கமலஹாசன் டிவிட்

X

சாத்தான் குளத்தில் ஜெயராஜ் , மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக மநீம தலைவர் கமல் ட்வீட் செய்துள்ளார். அதில் ,

சாத்தான் குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே ! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு ,

கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Newstm.in

Next Story
Share it