1. Home
  2. தமிழ்நாடு

விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்பு !! மனித கழிவுகளை அகற்றும் நவீன ரோபோக்கள் அறிமுகம் !! அமைச்சர் துவக்கம்

விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்பு !! மனித கழிவுகளை அகற்றும் நவீன ரோபோக்கள் அறிமுகம் !! அமைச்சர் துவக்கம்


இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியில் நிகழும் மரணங்களை தடுக்க 2013ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் மனித கழிவுகளை நீக்க மனிதர்கள் பணியமர்த்த தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் இச்சட்டத்திற்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ. 2.5 கோடியில் 5 நவீன ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இன்று அந்த ரோபோக்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like