காய்ச்சலுக்கு மாத்திரை கேட்டால் அந்த மாத்திரை கொடுத்து சீரழித்த தந்தை.. மகள் அதிர்ச்சி !

 | 

அம்மா இல்லாத இளம்பெண்ணுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தந்தை பாலியல் பலாத்காரம்  செய்த கொடூரம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹரலூர் என்ற பகுதியில் 19 வயது இளம் பெண் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த இளம்பெண் காய்ச்சலுக்காக தந்தையிடம் காய்ச்சல் மாத்திரையை கேட்டிருக்கிறார். ஆனால் அவரது தந்தையோ காய்ச்சல் மாத்திரைக்கு பதிலா தூக்க மாத்திரையைக் தனது மகளுக்கு அளித்திருக்கிறார். 

தூக்க மாத்திரையை உட்கொண்ட அந்த இளம்பெண் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திய அந்நபர் தனது சொந்த மகள் என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த இளம் பெண் தன்னுடைய மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போது தான் தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதனை அறிந்த அந்தப் இளம்பெண் அதிர்ச்சி அடைந்து அப்பாவின் இரண்டாவது மனைவியிடம் கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்ட அந்தப் பெண்ணின் சித்தி சரி விடு, இதைப் பற்றி வெளியே கூற வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அப்பெண் கழிவறைக்கு பயன்படுத்தும் கெமிக்கலை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ஆனால் தந்தைக்கு தண்டனை அளிக்க வேண்டும் என எண்ணியஅப்பெண் கெமிக்கலை குடித்த கையோடு காவல் நிலையத்திற்கு அளித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்ந்தனர். 

இதனையடுத்து தன்னுடைய சொந்த மகளையே பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்ட அவரது தந்தையை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த செயலுக்கு அவரது இரண்டாவது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் கண்விழித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று போலீசார் கூறியிருக்கின்றனர்.  

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP