ட்ரம்ப் பதவிக்கு ஆபத்து... வீதியில் இறங்கிய மக்கள்!

ட்ரம்ப் பதவிக்கு ஆபத்து... வீதியில் இறங்கிய மக்கள்!

ட்ரம்ப் பதவிக்கு ஆபத்து... வீதியில் இறங்கிய மக்கள்!
X

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்துவரும் நிலையில்,  அதிபர் ட்ரம்ப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

வாஷிங்டன் டிசியில் உள்ள ட்ரம்பின் ஹோட்டலுக்கு முன்பாக, போராட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரம்பை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். கொரோனா பாதிப்பை அதிபர் ட்ரம்ப் முறையாக கையாளவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கூறினர். அப்போது மழை பெய்த போதிலும், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ட்ரம்ப்பின் அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்க நாடாக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Next Story
Share it