#JUST IN : ஃபெஞ்சல் புயல் நிவாரணம் : ரூ. 15 லட்சம் வழங்கினார் நடிகர் கார்த்தி..!
ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனால் ஒன்றரை கோடி பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தமிழ்நாடு அரசு பல்வேறு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளுக்கான நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் கார்த்தி வழங்கினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் - உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான சகோதரர் நடிகர் கார்த்தி அவர்கள் ரூபாய் 15 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.என தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் - @UzhavanFDN அமைப்பின் நிறுவனருமான சகோதரர் @Karthi_Offl அவர்கள் ரூபாய்… pic.twitter.com/yv97h1bul1
— Udhay (@Udhaystalin) December 8, 2024
ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு முதல் ஆளாக திரையுலகிலிருந்து சிவகார்த்திகேயன் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.