ஊரடங்கு... சொந்த ஊரில் விவசாயம் செய்யும் இளம் நடிகை!

ஊரடங்கு... சொந்த ஊரில் விவசாயம் செய்யும் இளம் நடிகை!

ஊரடங்கு... சொந்த ஊரில் விவசாயம் செய்யும் இளம் நடிகை!
X

ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் இளம் நடிகை கீர்த்தி பாண்டியன் விவசாயப் பணிகளில் இறங்கியுள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அவரது தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன், தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை உழும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

newstm.in

Next Story
Share it