ஊரடங்கு துயரம்... 4 நாட்கள் சாப்பிடாததால் உயிரிழந்த முதியவர்!

ஊரடங்கு துயரம்... 4 நாட்கள் சாப்பிடாததால் உயிரிழந்த முதியவர்!

ஊரடங்கு துயரம்... 4 நாட்கள் சாப்பிடாததால் உயிரிழந்த முதியவர்!
X

ஊரடங்கு உத்தரவால் கடலூர் மாவட்டத்தில் உணவு கிடைக்காமல் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்ணாடம் பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் அப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வீடுகளில் உணவுகளை பெற்று உயிர்காத்து வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சரியான முறையில் உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர். இருப்பினும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது அளித்து வந்த உணவின் மூலம் உயிர் பிழைத்தனர். ஆனால் அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 


இந்நிலையில் பெண்ணாடம் முருகன் திரையரங்கம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உணவின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் அவர் உணவிற்காக சுற்றித்திரிந்ததாகவும், இறுதியில் பசியால் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it