1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கு விதிமீறல் : 2,85,150 பேர் கைது, சுமார் 3 கோடி ரூபாய் அபராதம்!

ஊரடங்கு விதிமீறல் : 2,85,150 பேர் கைது, சுமார் 3 கோடி ரூபாய் அபராதம்!


தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 2,85,150 போ கைது செய்யப்பட்டனா். 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய வேலை இன்றி வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. ஆனால் சிலர் வேண்டுமென்றே வெளியே சுற்றித்திரிகின்றனர். அதனால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,85,150 போ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக ரூ.2.68 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like