1. Home
  2. தமிழ்நாடு

மே 3 க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு ? எப்படி தெரியுமா !!

மே 3 க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு ? எப்படி தெரியுமா !!


கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தொழில் அதிபர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார்.

அதை தொடர்ந்து ஊரடங்கு முடியும் நிலையில் முதற்கட்டமாக சில ஆலைகள் இயங்க அனுமதி தரப்பட்டது. அதன்படி கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காகித ஆலைகள் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், உள்ளிட்ட ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஊரடங்கு தளர்வில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளையும், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளையும் அரசு அனுமதித்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

வரும் 3ம் தேதிக்கு பிறகு மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது.  வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நலனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் அதன் பின்னரே நாட்டுக்கு அழைத்து வர இயலும்.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. ஊரடங்கு முடியும் மே 3க்கு பிறகு 33 சதவீத ஊழியர்களுக்கு அரசு அனுமதித்துள்ளதால் அதன் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like