1. Home
  2. தமிழ்நாடு

தளர்வுகளுடன் ஜூலை 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !!

தளர்வுகளுடன் ஜூலை 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு !!

மேற்கு வங்கத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஜூலை 1-ம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா அலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. அதன்படி மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் 25% பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தனியார் நிறுவனங்கள் காலை 10 முதல் 4 மணி வரை 25% பணியாளர்களுடன் இயங்கலாம் என அவர் அறிவித்துள்ளார். மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.

உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன், மதியம் 12 மணி முதல், இரவு 8 மணி வரை செயல்படலாம். மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like