1. Home
  2. தமிழ்நாடு

ஆந்திராவில் மே 5 முதல் மீண்டும் ஊரடங்கு.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெகன்மோகன் !!

ஆந்திராவில் மே 5 முதல் மீண்டும் ஊரடங்கு.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெகன்மோகன் !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது சுடுகாடுகளில் இடமில்லாமல் உடல்கள் பொது இடங்களில் வைத்து எரியூட்டப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 5ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அறிவித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து ஆந்திராவில் கடந்த மாதம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அரசு விதித்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆந்திராவில் மே 5 முதல் மீண்டும் ஊரடங்கு.. கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெகன்மோகன் !!

அதில், மாநிலம் முழுவதும் வருகின்ற மே மாதம் 5ஆம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும், அதன் பிறகு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like