கருப்பர்கள் கூட்டம் !! விளாசி தள்ளிய பிரபல நடிகை !!
கருப்பர்கள் கூட்டம் !! விளாசி தள்ளிய பிரபல நடிகை !!

தமிழர்களின் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனல் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பல்வேறு காவல்நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்களும் கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை இந்த விவகாரத்தில் திமுக வாய்த்திறக்கவே இல்லை.
My humble take on #KarupparKoottam Violating Hindu sentiments with a derogatory video on Lord Subramanya to suit their political agenda @rvaidya2000 @MaridhasAnswers @vishwa_samvad @prasannavishy @PMuralidharRao @PonnaarrBJP https://t.co/sqr0docRBq
— Malavika Avinash (@MALAVIKAAVINASH) July 15, 2020
இது பல்வேறு தரப்பினரிடையே கடும் கோபத்தையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், ஜே.ஜே., ஆறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மாளவிகா அவினாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது ;
இந்துக்களின் கடவுள்களை திட்டுவதற்காகவே, ஏதோ கருப்பர் கூட்டம் கிளம்பி இருக்கிறதாமே..! ஒன்று உங்களுக்கு தெரியுமா.? நாங்கள் வழிபடும் சிவன், ராமர், கிருஷ்ணன், மீனாட்சி என அனைத்து கடவுள்களுமே கருப்புதான்.
500 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு கும்பல் மக்களை மதம் மாற்றியது. ஆனால், அவர்களை நீங்கள் திட்ட மாட்டீர்கள். ஆனால், உங்களுடன் 10 ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் இருக்கிறோம், ஆனால், இந்துக்களாகிய எங்களை திட்டுவீர்கள். உங்களது பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை, நாத்தீகம் எல்லாம், இந்துக் கடவுள்களுக்கு மட்டும்தானா..? ஏன் ஜிகாத் பற்றி எதாவது ஒரு வீடியோ போடுங்க பார்க்கலாம்.
இதனை முற்போக்கு சிந்தனை எனக் கூறினால் அதனை ஏற்க மாட்டேன். அனைத்தும் ஓட்டுக்காக… அடுத்த ஆண்டு ஆட்சியை பிடிக்கவே இந்த வேலையெல்லாம் நடக்கிறது. 70 ஆண்டுகளாக இதை செய்து வரும் உங்கள் ஆட்சியின் காலத்தில் சாதியை ஏன் ஒழிக்கவில்லை.
தேர்தல் சமயங்களில் மட்டும் இந்துக்களை இதுபோன்று திட்டினால் ஓட்டு விழுந்துவிடும். எல்லாம் அரசியல் தான். உங்களை சொல்லி குற்றமில்லை. ஓட்டு போடுபவர்களை சொல்லனும். தமிழ் கடவுளையே திட்டும் போது, அவர்களுக்கு ஏன் ஓட்டுப் போடனும். தமிழர்களின் ஓட்டு வேண்டும் , ஆனால் அவர்கள் வணங்கும் கடவுள்கள் கூடாதா ? இனிமேலாவது இந்துக்கள் கொஞ்சம் முழித்து கொள்ளுங்கள், என்ன நடக்கிறது என பாருங்க, எனத் தெரிவித்துள்ளார்.
Newstm.in