பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது - அமைச்சர் கீதாஜீவன்..!

அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன
இந்நிலையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம்தான் ’யார் அந்த சார்?’ என்பது வெட்டவெளிச்சமானது. இதையடுத்து, பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் மதுரையைச் சேர்ந்த எம்.எஸ்.ஷா , 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி உள்ளார்.
திமுக அரசு ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்த பிறகும் பிரச்சனை பெரிதாகிவிடாதா, அதில் குளிர்காய முடியாதா என ஏங்குவதுதான் இவர்களின் அரசியலாக இருக்கிறதே தவிர பெண்களின் பாதுகாப்பு குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாதவர்களாக தான் இருக்கின்றனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.