ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி!

சென்னை நீர் வழித்தடங்களை சரியாக பராமரிக்காத காரணத்தினால் பொதுப்பணித்துறைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 | 

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், "சென்னையில் உள்ள கூவம் ஆறு முழுமையாக சீரமைத்து மீட்டெடுக்கப்படும் என ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014-15ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, அத்திட்டத்திற்கு ரூ.1,934 கோடியே 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டது.  இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தப்படவில்லை.  எனவே, பொதுப்பணித்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில்,  சென்னை நீர்வழித்தடத்தை  சுத்தம் செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முனைப்பு காட்டாத தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP