தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாது

தஞ்சை மக்களவை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட அனுமதிக்க உத்தரவிட முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தமாகாவின் இடைக்கால கோரிக்கையையும் நிராகரித்தது.
 | 

தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரும் வழக்கின் விசாரணையில், 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறி சைக்கிள் சின்னத்தை தமாகா பெற்றுள்ளது. ஆனால், மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே தமாகா போட்டியிடுகிறது. குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இதன் பிறகு, 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனைக்கு தடை விதிக்க முடியாது என்ற நீதிமன்றம், இவ்வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP