பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல்!

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
 | 

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த வைகோ, செப்.15 ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் பங்கேற்க பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டதாகவும், தற்போது, காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலால் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். 

வைகோ தரப்பிலான முறையீட்டை கேட்ட நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு வைகோ தரப்புக்கு அறிவுறுத்தினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP