மேலவளவு படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ்

மேலவளவு படுகொலை வழக்கில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 | 

மேலவளவு படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ்

மேலவளவு படுகொலை வழக்கில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

1996ஆம் ஆண்டு பட்டியலின சமூகத்தினை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை, மேலூர் தாலுகாவில் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் முருகேசன் உட்பட ஏழு பேர் 1997ஆம் ஆண்டு 30ஆம் தேதி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. 

17 பேரில் 3 பேர் திமுக ஆட்சிகாலத்தில் வயது முதிர்வு காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேரையும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பட்டியலின தலைவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட முருகேசனின் மனைவி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து. குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். 

ஆனால் 13 பேரும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த நவ.9ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்
வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலவளவு படுகொலை வழக்கில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பவும், நோட்டீஸை கொண்டு சேர்ப்பதை மேலூர் டிஎஸ்பி உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், முன்கூட்டியே கைதிகளை விடுவிக்க தயாரிக்கப்பட்ட பட்டியல் உள்ளிட்டவற்றை வரும் 27ஆம் தேதி தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்து, வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP