சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி திறப்பு

சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
 | 

சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி திறப்பு

சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்துவைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

சேலம் மணியனூரில் தற்காலிக அரசு சட்டக்கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். கோவை அரசு சட்டக்கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் சேலம் கல்லூரி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 பேர், 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 பேரை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, புதிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேருக்கு ஒதுக்கீடு ஆணையை வழங்கி பேசிய முதலமைச்சர், புதிய சட்டக் கல்லூரிக்கான கட்டடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டப்படிப்பு மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP