தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 | 

தமிழகத்தில் வரும். ஏப்.18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்.18ம் தேதி பெரிய வியாழன் என்பதால் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பார்கள். இதனால் வாக்களிப்பவர்களின் சதவீதம் குறையும் எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டுவரும் நிலையில், இதற்காக தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP