பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 | 

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் முறைகேடு நடந்ததாக, கல்லூரி முதல்வராக என்.சேட்டு நியமிக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் நந்தினி உள்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று விசாரணைக்கு வந்த  இந்த வழக்கில், சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கல்லூரி முதல்வர் தேர்வில்  நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஆணையிட்ட நீதிமன்றம், கல்லூரி முதல்வர் பதவிக்கு விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு  நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், ஊழல் நடவடிக்கைகள் சமுதாயத்தில் புற்றுநோய் போல் பரவிவருவதாகவும், நேர்மையின்றி  நியமிக்கப்பட்ட ஒருவர் நேர்மையாக செயல்படுவார் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்,சுப்ரமணியம், உன்னத  நோக்கத்தில் தொடங்கப்பட்ட கல்லூரியில் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் பாவம் செய்கின்றனர் என்று வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP