1. Home
  2. தமிழ்நாடு

பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது !!

பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது !!


ஆன்லைன் மூலம் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன. அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது !!

இந்த நிலையில், கவுன்சிலிங் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்கள் தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆன்-லைனில் நடைபெறும்.

முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,190, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,124, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த 182 மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று (செப்.15) தொடங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 18ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கடிதங்களை வழங்குவார்.

பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது !!

வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படுவதால் காலியாகும் இடங்கள் காலியாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இடங்கள் காலியாவதை பொறுத்து 5 முறை கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடங்கள் குறைவாக இருந்தாலும் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு பள்ளி மாணவர்களில் 11 ஆயிரத்து 390 பேருக்கு இடம் கிடைக்கும், என அவர் கூறினார்.



newstm.in

Trending News

Latest News

You May Like