அக்‌ஷய் குமார் ரூ.180 கோடி கொடுத்தாரா?! வலம் வரும் வதந்தி!!

 | 

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நிவாரண நிதியாக 180 கோடி ரூபாய் பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளார் என்கிற செய்தி கடந்த இரு தினங்களாக வலைத்தளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.. 

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்கள் பலரும் குறிப்பிட்ட தொகையை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சருக்கு அல்லது பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். 


இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா நிவாரண நிதியாக 180 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதுவரை வழங்கப்பட்ட நிதிகளில் இதுவே அதிகம் என்றும் அந்த செய்தி வலம் வந்துக் கொண்டிருக்கிறது. தனது அடுத்தப் படத்தைப் பற்றிய செய்தியை அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியிடம் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு, ரூ.180 கோடி கொடுத்துள்ளதாக பரப்பி வருகின்றனர். இந்த செய்தி உண்மையல்ல!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP