தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!
X

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனுக்கு மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு தனக்கு எந்த உடல் நலக்குறைவும் இல்லை,  கொரோனா தொற்றும் இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் அவர் பங்கேற்றிருந்தார். அமைச்சர் அன்பழகனுடன், ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it