8 காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று !! காவல் நிலையம் இழுத்து மூடல்...

8 காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று !! காவல் நிலையம் இழுத்து மூடல்...

8 காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று !! காவல் நிலையம் இழுத்து மூடல்...
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் திருவண்ணாமலையில் தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டங்களுக்கு செல்ல தடைவிதித்திருக்கும் நிலையில் , பல்வேறு மக்கள் விதிகளை மீறி வெளியில் சுற்றி திரிகின்றனர்.

இதனால், கொரோனா தொற்று அதிகளவு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு காவல் நிலையத்தில்  பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனா பாதிப்பு, மற்ற காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா தொற்று பிற காவலர்களுக்கு பரவாமல் இருக்க செய்யாறு காவல் நிலையம், கடந்த 3 நாட்களாக மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது, அந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியான நிலையில், மேலும், புதிதாக 4 காவலர்கள் மற்றும் காவலர்களின் நண்பர்கள் குழுவினர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதித்ததை தொடர்ந்து செய்யாறு காவல் நிலையம் தொடர்ந்து மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

Newstm.in

Next Story
Share it