ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 ஆண்கள் , 9 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு !!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 ஆண்கள் , 9 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு !!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 ஆண்கள் , 9 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு !!
X

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 566 ஆக உயர்ந்துள்ளது.

அந்தக் குடும்பத்தில் உள்ள 17 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அவனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவர் மூலம் அந்த குடும்பத்தினருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது. 16 பேரில் 7 பேர் ஆண்கள் மற்றும் 9 பேர் பெண்கள்.

அதில் 10 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றால் 11,923 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it