1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை!

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை!


தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெறலாம் என உயா்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், உயிர்காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலைப் பணியாளா்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை எழுப்பி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை!
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டங்களின் மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சைகளைப் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. எனவே, கொரோனா சிகிச்சை தொடா்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 19) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like