அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2,325 பேர் பலி!

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2,325 பேர் பலி!

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா - ஒரே நாளில் 2,325 பேர் பலி!
X

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து 7 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் புதிதாக 31,487 பேருக்கு கொரோனா பரவியதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 2325 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 86,000 பேர் குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரும், பிரான்ஸ், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. துருக்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

Next Story
Share it