பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி.. தொடரும் சோகம் !

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி.. தொடரும் சோகம் !

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி.. தொடரும் சோகம் !
X

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. ஆனால், நேற்று மீண்டும் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனைகளில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர். எவ்வித இணை நோய்களும் இல்லாத 7 பேர் கொரோனா பாதிப்புக்கு மட்டும் பலியாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று நேற்று கொரோனாவால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழந்தைக்கு பிறந்ததில் இருந்து ஏற்கனவே 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்தக் குழந்தை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழந்தை நேற்று மதியம் 2.30 மணியளவில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனாவுக்கு இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1169 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

newstm.in 

 

Next Story
Share it