இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!
X

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி விட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 606 பேர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 8 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 463 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து ஆயிரத்து 141 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,717 பேர் உயிரிழந்துள்ளனர். 47,796 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 40,698 பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 367 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 22,047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it